×

பள்ளி மாணவர்கள் கடும் ரகளை நடுரோட்டில் பஸ்களை நிறுத்தி ஊழியர்கள் போராட்டம்

துரைப்பாக்கம்: தி.நகரில் இருந்து நேற்று மாலை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புக்கு மாநகர பேருந்து (த.எ.19எ) புறப்பட்டது. டிரைவர் குமரவேல் (30) பஸ்சை ஓட்டினார். செல்வகுமார் (50) நடத்துனராக இருந்தார். எஸ்ஆர்பி டூல்ஸ் நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பலர் பேருந்தில் ஏறினர். இவர்கள் பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ரகளையில் ஈடுபட்டனர். இதை நடத்துனர் செல்வகுமார் தட்டிக் கேட்டார். ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் மேட்டுகுப்பம் சிக்னல் அருகே பேருந்து வந்தபோது, செல்வகுமார் மீது முட்டை, சானிடைசர் வீசிவிட்டு, பேருந்திலிருந்து இறங்கி தப்பியோடினர்.  இதனால், சாலை நடுவே பேருந்தை நிறுத்திவிட்டு, குமரவேலும், செல்வகுமாரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அவ்வழியே வந்த 10க்கும் மேற்பட்ட மாநகர பேருந்தை சாலை நடுவே நிறுத்தி, டிரைவர், கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பயணிகள் அவதிக்குள்ளாயினர். தகவலறிந்த துரைப்பாக்கம் உதவி கமிஷனர் ஜான் விக்டர் மற்றும் கண்ணகி நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, மாநகர பேருந்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.

Tags : School students , School students protest against bus stops
× RELATED கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை...